சீன விநியோக சங்கிலி பன்முகமானதாகவும் மிக பெரிய அளவாகவும் உள்ளது.
அதோடு, விரைவான பதிலளிப்புத் திறனும் இருப்பது தொழில்நிறுவனங்களின் உற்பத்தியை உத்தரவாதம் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்மையில் நிறைவடைந்த 3ஆவது உலக விநியோக சங்கிலிப் பொருட்காட்சியில் பன்னாட்டு தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
1200 தொழில்நிறுவனங்கள் நடப்பு விநியோக சங்கலிப் பொருட்காட்சியில் கலந்து கொண்டன. அவற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த பொருட்காட்சியில் இருந்ததை விட, 15விழுக்காடு அதிகரித்து வெளிநாட்டு தொழில்நிறுவனங்களில் முதலிடத்தை வகித்தது. இதில் 6000க்கும் அதிகமான ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் மற்றும் ஒத்துழைப்பு நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளன.
உலக விநியோக சங்கிலியின் நிதானத்தைப் பேணிகாப்பதற்கான மக்களின் அவசர தேவையை இப்பொருட்காட்சியின் வரவேற்பு முழுமையாகப் பிரதிபலித்துள்ளது.
பதிலளிப்பு வேகம், செலவு மற்றும் பலன், புத்தாக்க மேம்பாடு முதலியவற்றில் சீனாவின் சாதனங்கள் ஈடிணையற்றதாக உள்ளன. சீன விநியோக சங்கிலி இல்லாத உலகத்தைக் கற்பனை செய்ய முடியாது என்று பல நாடு கடந்த தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் வளர்ச்சியடைவது மேலும் வேகமான வசதியாக மாற்ற, சீனா வணிகம் புரியும் சூழலை மேம்படுத்தி வருகிறது. சீனாவின் புத்தாக்க சிந்தனைகள் வெளிநாட்டு நிறுவனங்களின் புத்தாக்க வளர்ச்சிக்கு முக்கிய உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது.
உலக விநியோக சங்கிலி ஒன்றுபட்டு கூட்டாக முயற்சி செய்தால் தான், விநியோக சங்கிலியின் நெகிழ்வுத் தன்மை உண்மையாக வலுப்படுத்தப்பட முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தின் மிகப் பெரிய நாடு மற்றும் தயாரிப்புத் தொழிலின் பெரிய நாடான சீனா உலக விநியோக சங்கிலியின் நிலைப்புத் தன்மைக்கு மதிப்பு மிக்க உறுதித் தன்மையை பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.