வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹2.37 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 12.6% வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஏப்ரல் 2024 இல் ₹2.10 லட்சம் கோடியாக இருந்த முந்தைய சாதனையை விட அதிகமாகும்.
மேலும் 2025-26 நிதியாண்டிற்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் குறிக்கிறது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் ₹1.9 லட்சம் கோடி அளவிற்கு பங்காளித்துள்ளன, இது 10.7% அதிகமாகும்.
அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வருவாய் 20.8% அதிகரித்து ₹46,913 கோடியாக உள்ளது.
ஏப்ரல் 2025இல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை
