இன்று முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய நிதி மாற்றங்கள்: உங்கள் பாக்கெட்டை பாதிக்கும் அதிரடி அறிவிப்புகள்!

Estimated read time 1 min read

செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை சாமானிய மக்களின் பட்ஜெட் மற்றும் நிதி நிலையை பாதிக்கும். சமையலறைச் செலவுகள் முதல் வங்கிச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணம் வரை பல்வேறு துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றம். இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலேயே செய்யப்படுகின்றன. எனவே, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம். விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் சமையலறை பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 202 குறைக்கப்பட்டது. அதேவேளையில், 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விதிமுறை ஒன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாறவுள்ளது. இனி போர்டிங் பாஸ்களில் முத்திரையிட வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், சர்வதேச பயணிகள் விமான நிலையக் குடியேற்றப் பிரிவு (immigration) கவுண்டர்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. பயணிகள் தங்கள் மொபைல் போனில் உள்ள ‘இ-போர்டிங் பாஸ்’ அல்லது அதன் அச்சிடப்பட்ட நகலைக் காண்பிப்பதன் மூலமே குடியேற்றச் சோதனையைக் கடந்து செல்ல முடியும். குடியேற்றச் செயல்முறையை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றுவதற்காக குடியேற்றப் பிரிவு இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

விமான எரிபொருள் (ATF) விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றியமைக்கின்றன. இது விமானப் பயணக் கட்டணங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தலாம். இதன் விளைவாக, செப்டம்பர் 1ஆம் தேதியன்று புதிய விமான எரிபொருள் விலைகள் அறிவிக்கப்படலாம். CNG மற்றும் PNG விலைகளிலும் மாற்றம் ஏற்படலாம்.

டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது அனைத்து கார்கள் மற்றும் SUV-களின் விலையை ரூ. 25,000 வரை உயர்த்துகிறது. இது செப்டம்பர் 1-முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வு ICE (எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள்) மற்றும் மின்சார வாகனங்கள் (EV) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். புதிய விலைகள் கார் மாடல் மற்றும் வகையைப் பொறுத்து மாறுபடும். டாடா நிறுவனத்தைத் தவிர, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுவும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம். வட்டி விகிதங்கள் குறைந்தால் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வருமானம் சற்று குறையலாம். வட்டி விகிதங்கள் உயர்ந்தால் வாடிக்கையாளர்கள் பயனடையலாம். எனவே, FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் செப்டம்பர் 1ஆம் தேதி வரை காத்திருப்பது நல்லது. அன்றைய தினம் வட்டி விகிதங்கள் மாறினால் முதலீடு செய்வதற்கு முன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்கலாம்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம். அடிக்கடி செய்யப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அதிக கட்டணம் வசூலிக்கலாம். எனவே, ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன், வங்கிகள் தங்களுடைய கட்டண வரம்புகளை மாற்றியமைக்கின்றனவா என்பதை அறிய செப்டம்பர் 1ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

You May Also Like

More From Author