25ஆவது சீனச் சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 8ஆம் நாள் சியாமென் நகரில் நடைபெற்றது. ஒரு லட்சத்து 20ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய காட்சியிடத்தில் நூற்றுக்கும் அதிகமான முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
120க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுக்களும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுக்களும் நடப்புப் பொருட்காட்சியில் பங்கேற்றுள்ளன. 51 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் அதில் காட்சியிடங்களை நிறுவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.