சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுறவுச் சட்டம் ஜூலை முதல் நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் துவங்கியது. மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தைச் சீனா முன்னேற்றும் உறுதியான நம்பிக்கையையும், நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் மற்றும் சர்வதேச நேர்மையைச் சீனா பேணிக்காக்கும் மனவுறுதியையும், முழு உலகமும் இச்சட்டத்தின் மூலம் மேலும் செவ்வனே அறிந்து கொள்ள முடியும்.
தற்போது, சீனா உலகத்துடனான உறவில் முன்னென்றும் கண்டிராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம், உலக அமைதி மற்றும் நிதான நிலையைப் பேணிக்காத்து, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாகச் சீனா விளங்கியுள்ளது. மற்றொரு புறம், மேலும் சிக்கலான சர்வதேசச் சூழ்நிலையைச் சீனா சந்தித்து கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில், வெளிநாட்டுறவுச் சட்டத்தை இயற்றுவது, சீனாவின் சட்டப்படியான ஆட்சி முறைக்குப் பொருந்தியது. அதேவேளையில், உலகத்துடன் சீனா தொடர்பு கொள்வதற்கு வலிமைமிக்க சட்ட உத்தரவாதத்தையும் வழங்கும்.
இச்சட்டத்துக்கு தெளிவான சில தனிச்சிறப்புகள் உண்டு. அவற்றுள் முதன்மையானது நட்புப்பூர்வ பரிமாற்றத்தை முன்னேற்றுவதாகும். மேலும், வெளிநாடுகளுக்குத் திறப்பை விரிவாக்குவதும் இச்சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிரவும், நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப் பேணிக்காக்கும் சட்டமாகவும் இது திகழ்கிறது.
அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகிய அடிப்படைகளில் சீனா உலகத்துடன் தொடர்பு கொண்டு வரும் போக்கானது இச்சட்டத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.