3ஆவது உலக சீனவியல் அறிஞர் மாநாடு துவக்கம்

3ஆவது உலக சீனவியல் அறிஞர் மாநாடு அண்மையில் சீனாவின் கான்சு மாநிலத்தின் துன்குவாங்கில் துவங்கியது. இதில், உலகில் சுமார் 70 நாடுகளிலிருந்து வந்த ஏறக்குறைய 300 அறிஞர்கள் பங்கெடுத்து சீனாவைப் பற்றி மேலதிகமாக அறிந்துகொண்டுள்ளனர்.

சீன நாகரிகமானது உலக மக்கள் அனைவரும் குடும்பத்தினர்கள் போல் நல்லிணக்கமாக பழகுவதற்கான அறிவுத்திறமையைக் கொண்டிருப்பதோடு, தற்போதைய உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிப்பதற்குரிய முக்கிய அனுபவங்களையும் வழங்கியுள்ளது என்று இதில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

தற்போது, உலகின் பல்வேறு நாகரங்களுக்கிடையில் அதிக இடைவெளி காணப்படுகின்றது. இந்நிலையில், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுத் திறமையைத் திரட்டி, உலகின் கூட்டுப் பகிர்வு வளர்ச்சிக்கான பாதையை நாட சீனா விரும்புவதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author