பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

Estimated read time 0 min read

பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அலுவலக கோப்புகள், கணினி பதிவேடுகள் மற்றும் கள ஆய்வில் திரட்டப்பட்ட சான்றுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

இதனிடையே முறைகேடாக பதிவு செய்யப்பட்ட நிலத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

You May Also Like

More From Author