2026ஆம் ஆண்டின் முதல் 4 திங்கள்காலத்தில், சீனாவின் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 532 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. சேவை வர்த்தகத்தின் பற்றாக்குறை 51 ஆயிரத்து 532 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13 ஆயிரத்து 974 கோடி யுவானாக குறைந்துள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில், அறிவு சார் சேவை ஏற்றுமதித் தொகை 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளதோடு, மொத்த சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகையில் 44.4 விழுக்காட்டையும் வகிக்கிறது.
சுற்றுலாச் சேவை ஏற்றுமதித் தொகை 14 ஆயிரத்து 715 கோடி யுவானை எட்டி, 30.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. போக்குவரத்து சேவை இறக்குமதி தொகை 31 ஆயிரத்து 645 கோடி யுவானை எட்டி, 24.9 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
