அமெரிக்க வணிக அமைச்சகம் கூறிய “சில்லுக்கான கண்காணிப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வது” பற்றி சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யோங்ட்சியான் அண்மையில் சீனாவின் நிலைபாட்டை விவரித்தார். அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா நாட்டின் பாதுகாப்பை இடைவிடாமல் பயன்படுத்தி, சாக்குப்போக்காகச் சொல்லி, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீனத் தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களுக்குக் கடுமையாகத் தீங்கு விளைவித்துள்ளது. இது சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கையும், உலக அரை மின் கடத்தித் துறைச் சங்கிலி வினியோகத்தின் நிதானத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. சீனா இதனை எப்போதும் எதிர்த்து வருகிறது என்றார். மேலும், அமெரிக்கா தவறான செயலைத் திருத்தி, சீனா மீது பாகுபாடு செய்யும் நடவடிக்கையை நிறுத்தி, உலகத் தொழிற்துறைச் சங்கிலியின் வினியோக நிதானத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் ஹே யோங்ட்சியாங் தெரிவித்தார்.
அமெரிக்கா கூறிய “சில்லுக்கான கண்காணிப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வது” பற்றி சீன வணிக அமைச்சகத்தின் கருத்து
Estimated read time
0 min read
You May Also Like
மண்சரிவு பேரழிவு ஏற்பட்ட காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது
August 31, 2026
சீன-பிரேசில் அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
January 23, 2026
ஏபெக் தலைமை நிர்வாக அதிகாரி உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை
November 1, 2025
