சான் பிரான்சிஸ்கோவில் 8ஆவது சீன-அமெரிக்க சகோதரி நகரங்கள் மாநாடு

8ஆவது சீன-அமெரிக்க சகோதரி நகரங்கள் மாநாடு, சீன-அமெரிக்க நகரங்களின் உயர்தர வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது என்ற தலைப்பில் ஜுன் 5ஆம் நாள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது.

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் அண்மையில் நடத்திய சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய இருதரப்பு நிகழ்வான இம்மாநாடு, இருநாட்டு அரசுகள் மற்றும் நட்பு அமைப்புகளின் ஆக்கப்பூர்வ மறுமொழிகளைப் பெற்றுள்ளது. சீனாவின் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் அமெரிக்காவின் 160 பிரதிநிதிகளும் ஒன்றுகூடி, பசுமை வளர்ச்சி மற்றும் நகர நிர்வாகம், கலாசாரம் மற்றும் சுற்றுலா, கல்வி மற்றும் இளைஞர் ஆகிய 3 கருப்பொருட்களில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருதரப்புகளிடையே 5 ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதோடு, 31 ஒத்துழைப்பு திட்டங்களின் சாதனைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சீன-அமெரிக்க மக்களிடையே நட்புறவை ஆழப்படுத்துவதற்கும் இருநாடுகள் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கும் சகோதரி நகரங்களின் உறவு மிக முக்கியமானது என்று இம்மாநாட்டில் கலந்து கொண்ட விருந்தினர்கள் தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author