உலக பாசனத் திட்டப்பணிகளின் மரபு செல்வப் பட்டியலில் சீனாவின் 4 திட்டப்பணிகள் புதிய பதிவு

Estimated read time 1 min read

சர்வதேச பாசனம் மற்றும் வடிகால் கமிட்டியின் 75ஆவது செயற்குழு கூட்டம் செப்டம்பர் 3ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.

2024ஆம் ஆண்டு உலக பாசன திட்டப்பணிகளின் மரபுச் செல்வப் பட்டியல் அதில் வெளியிடப்பட்டது. சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கேன் எர் ஜிங், அன்ஹூய் மாநிலத்தின் ஹூய்சோ எர்பா-ஜியாங்சி மாநிலத்தின் வுயுவான் ஷி எர், ஷ அன்சி மாநிலத்தின் ஃபங்யேன் படிமுறை வயல், ச்சுன்ஜிங் மாநகரின் ஜியு ஃபுங் யேன் ஆகிய 4 திட்டப்பணிகள் இப்பட்டியலில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டன.

இதுவரை, உலக பாசனத் திட்டப்பணி மரபுச் செல்வங்களில் சேர்ந்த சீன திட்டப்பணிகளின் எண்ணிக்கை 38ஐ எட்டியுள்ளது.
இப்பட்டியல் 2014ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

பாரம்பரிய பாசனத் திட்டப்பணிகளின் ஞானத்தைத் தொகுத்து தொடரவல்ல பாசனத் துறையின் வளர்ச்சிக்கு வரலாற்று அனுபவம் மற்றும் அறிவாற்றலை வழங்குவது அதன் நோக்கமாகும்.

இதுவரை, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஓஷானியாவின் 20 நாடுகளைச் சேர்ந்த 177திட்டப்பணிகள் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author