“எந்த நேரத்திலும், எந்தப் பள்ளிக்கும் நேரில் வருவேன்!” கல்வித்துறை அமைச்சர்

Estimated read time 0 min read

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தான் ஒரு அமைச்சராக இல்லாமல் ஒரு சகோதரனாக இந்தத் தகவலைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள எந்தவொரு பள்ளிக்கூடத்திலும், எப்போது வேண்டுமானாலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தான் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து ஒரு கூட்டு பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதால், இந்த ஆய்வுகள் ஏனோதானோ என்றோ அல்லது ஒரு சடங்காகவோ இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இதனால், தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் தாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்வோம் என்றும், எனவே பள்ளிகளை எல்லா நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டு பொறுப்புணர்ச்சி என்றும் அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author