வேளாண் துறை உற்பத்தி செலவு அதிகரிப்பு

அண்மையில் தீவிரமாகி வருகின்ற மத்திய கிழக்கு நிலைமை, உலக தானிய பாதுகாப்பு பற்றிய சர்வதேச சமூகத்தின் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் துறை அமைப்பின் முதன்மை பொருளியலாளர் காலுன் சீன ஊடகக் குழுமத்திற்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,

தற்போதைய மோதல், தானிய வினியோகத்தை உடனடியாக பாதிக்காது, ஆனால், தானிய உற்பத்தி செலவை அதிகரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் உலக தானிய சந்தையைப் பாதிக்கும் என்றார்.

இந்த அமைப்பு மார்ச் திங்களில் வெளியிட்ட அறிக்கையின் படி, எரி பொருட்களின் விலை அதிகரித்ததால், 2026ஆம் ஆண்டு மார்ச் திங்களில் உலக உணவு விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1 விழுக்காடு அதிகரித்தது. கடந்த இரு மாதங்களில் இந்த குறியீடு தொடர்ந்து அதிகரித்தது. மத்திய கிழக்கு பிரதேசம், எரி பொருள் மற்றும் வேதியியல் உரம் சரக்கு போக்குவரத்தின் முக்கிய வழிபாதையாகும். வினியோகம் தடுக்கப்பட்டால் அல்லது போக்குவரத்து செலவு அதிகரித்தால், வேளாண் துறை உற்பத்தி செலவு அதிகரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

More From Author