மூ மலை பள்ளத்தாக்கு பகுதியில் புதிய நீர்வழி திட்டப்பணி துவக்கம்

Estimated read time 0 min read

யாங்சே ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு பகுதியில் புதிய நீர்வழி திட்டப்பணியின் துவக்க விழா ஜுன் 8ஆம் நாள் முற்பகல் சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் யீசாங் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் அரசவையின் துணை தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங் இந்நிகழ்வில் பங்கேற்று, திட்டப்பணியின் துவக்கத்தை அறிவித்தார்.

மூ மலை பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள புதிய நீர்வழி திட்டப்பணி, நீர் சேமிப்பு, கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய திறன்களைக் கொண்டு, மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணிக்குப் பிறகு யாங்சே ஆற்றில் நடைபெறும் மிகப்பெரிய பன்னோக்கு திட்டப்பணியாகும். இத்திட்டப்பணி நிறைவேற்றப்பட்ட பிறகு, மூ மலை பள்ளத்தாக்கு அணை, கேஜோபா அணை ஆகியவற்றின் மையப் பகுதிகளில் 4 வழி மதகு கட்டமைப்பு உருவாக்கப்படும். இது, யாங்சே ஆற்றின் நீர்வழி போக்குவரத்து திறனை அதிகரிக்க உதவுவதோடு, யாங்சே ஆறு பொருளாதார மண்டலத்தின் உயர்தர வளர்ச்சிக்கும் சிறப்பாக ஆதரவளிக்கும்.

You May Also Like

More From Author