இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது, ஹமாஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்து, பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசாவை முழுவதுமாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகாரிகள் தகவல்
