பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் சீனாவின் வேகம்

2026ஆம் ஆண்டு புதிய எரியாற்றல் சந்தையின்  நீண்டகால முன்னாய்வு அறிக்கை ஒன்றைப் புளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் அண்மையில் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2030ஆம்  ஆண்டுக்குள், சீனாவின் பசுங்கூட வாயு வெளியேற்ற அளவு, உச்ச நிலையை விட 17 விழுக்காடு குறையும் எனத் தெரியவந்துள்ளது. இது, சீனா முன்பு வெளியிட்ட தொடர்புடைய வாக்குறுதியில் வகுக்கப்பட்டுள்ளதை விட மேலும் வேகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ரஷ்ய-உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள கடும் எரியாற்றல் நெருக்கடி, 2026ஆம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க-ஈரான் நெருக்கடியால் காணப்படும் எரியாற்றல் விலை உயர்வு, வினியோகத் துண்டிப்பு முதலிய சூழ்நிலைகளின் பின்னணியில் உலகின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தேவைகளின்படி, உலகளவில் எரியாற்றல் மாற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

அடுத்த 10 ஆண்டுகாலத்தில், சீனா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா முதலிய வலிமையான புதுப்பிக்கப்பட்ட எரியாற்றல் திறன் கொண்ட பொருளாதாரங்கள், பசுங்கூட வெளியேற்றத்தில் அதிகமாகப் பங்காற்றும். 2035ஆம்  ஆண்டுக்குள், உலகளவில் மின்னாற்றல் வாரியங்களின் காபன் வெளியேற்றத்தை குறைப்பதில் அவை 86 விழுக்காடு பங்கு ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author