2026 உலக மனித உரிமை மேலாண்மை உயர் மன்றக் கூட்டம் ஜூன் 11ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேலான நாடுகள், ஐ.நா. நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்துகொண்டு விவாதித்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் இக்கூட்டத்தில் தலைமை உரை வழங்கினார்.
இதில் கலந்துகொண்டோர் பலர் கூறுகையில், மனித உரிமைக்கு மதிப்பளித்து உத்தரவாதம் செய்வதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார். 2023 உலக மனித உரிமை மேலாண்மை உயர் மன்றக் கூட்டத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், பாதுகாப்பின் மூலம் மனித உரிமையைப் பேணிக்காத்து, வளர்ச்சியின் மூலம் மனித உரிமையை விரைவுபடுத்தி, ஒத்துழைப்புகளின் மூலம் மனித உரிமையை உறுதி செய்யும் சீனாவின் கருத்துக்களை ஷிச்சின்பிங் முன்வைத்தார் என்று தெரிவித்தனர்.
உலகின் பல்வேறு நாடுகள் இணைந்து, மனித உரிமை நாகரிகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தூண்டி, மனித குலப் பொதுச் சமூகத்தைக் கையோடு கை கோர்த்து உருவாக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
