ஜூன் மாத இறுதி வரை, சீன நாடளவில் அடிப்படை ஓய்வூதிய பராமரிப்பு, வேலையின்மை மற்றும் வேலை பணியின் போது காயம் ஆகிய காப்புறுதியில் சேர்ந்த மக்களின் எண்ணிக்கைகள் முறையே 107கோடியே 10லட்சம், 24கோடியே 50லட்சம் மற்றும் 30கோடி ஆகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட, இவை நிலைப்புடன் அதிகரித்துள்ளதாகச் சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது.
மேலும், சீன சமூக காப்புறுதி அட்டையின் சேவைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. நாடளவில் இந்த அட்டையைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 139கோடியை எட்டி மொத்த மக்கள் தொகையில் 98.9விழுக்காட்டை வகித்துள்ளது. அவற்றில் மின்னணு சமூக காப்புறுதி அட்டைப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை 109கோடியே 70லட்சம் ஆகும்.