கிராம வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேளாண்மை நவீனமயமாக்கலைத் துரிதப்படுத்துவதிலும் சாலைக் கட்டுமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கடந்த மே திங்களில், கிராமச் சாலைக் கட்டுமானம் குறித்து கூறுகையில் கிராமவாசிகளின் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் கிராம வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் கிராமப்புற சாலையை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தற்போது, சீனாவின் பல்வேறு பகுதிகளில், கிராமச்சாலைக் கட்டுமானம், மேலாண்மை, பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகிய பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ட்சிங்காய் மாநிலத்தின் தொங்டே மாவட்டத்தை எடுத்துக்காட்டாக கூறலாம்.
கடந்த சில ஆண்டுகளில் கிராமச் சாலைகளின் கட்டுமானத்தில் உள்ளூர் அரசு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள், தொங்டே மாவட்டத்தில் மொத்த 334 கி.மீ தூரத்துக்கு கிராமப்புறங்களில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கிராமங்களை இணைத்துள்ள சாலைகள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு நன்மை பயத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறையில் 16 கோடிக்கும் மேலான ஒதுக்கீடு செய்யப்பட்டு, முழு மாவட்டத்திலும் 320 கி.மீ சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டது அல்லது மறுசீரமைக்கப்பட்டுள்ளது.