பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை பைந்தமிழ் கவிஞர் பாவலர் பாப்பாக்குடி அ. முருகன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதும் ரூபாய் 25 ஆயிரம் பணமுடிப்பும் வழங்கப் பெற்றதைப் பாராட்டித்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத் தமிழ்இலக்கிய அமைப்புகள் இணைந்து பாராட்டு விழா நடத்தின
விழாவிற்குத் தென்காசி திருவள்ளுவர் கழகத் துணைத் தலைவர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன்
தலைமை தாங்கினார்,
பாபநாசம் மூன்றாம் திருநாள் கல்வி அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு பெ. கிருட்டிணன் முன்னிலை வகித்தார்
, சிறப்பு விருந்தினராகப் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் வி. ஏ. மாரிவண்ணமுத்து பாப்பாக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ந. ஆனைக்குட்டி பாண்டியன்
அவர்களுவருகை தந்து சிறப்பித்தனர்,
முன்னதாகத் இ. முருகேசன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா இனிதே தொடங்கியது சேவைச் செம்மல் திரு ச. இலக்குமணன் அனைவரையும் வரவேற்றார், பக்தித் தமிழ்ப்பாவலர் பாரதி க. கண்ணன் பாவலர் பாப்பாக்குடி அ.முருகன் அவர்களைவாழ்த்தி பேசினார்
விழாவில் அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை தலைவர் புலவர் ஐயப்பன் செயலர் இலக்குமணன் பொருளாளர் பாரதி கண்ணன் சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் மகா அறக்கட்டளை நிர்வாகி கல்விடை மகாராஜன் அம்பை மரகத சுப்பிரமணியன். கழுகுமலை பாலகிருஷ்ணன் மற்றும் 25க்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகளின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர்
உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள்
நிகழ்ச்சியை சீதாராமன் மற்றும் தங்கமாரி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்
நிறைவாக செல்வகுமார் நன்றி கூறினார்