G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோட்; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரம் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளின் அழைப்பை ஏற்று, அந்நாடுகளில் சனிக்கிழமை முதல் வரும் 18-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா். முதலாவதாக பிரான்சின் நைஸ் (Nice) நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, வரும் 14ம் தேதியன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள், ஏஐ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இந்த பயணத்தின்போது பிரான்சில் நடைபெறும் முக்கிய ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இப்பயணத்தின் அடுத்த கட்டமாக ஸ்லோவேக்கியா நாட்டுக்கு சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

You May Also Like

More From Author