உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதி தொழில்நுட்பத் திருவிழா 2024இல் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் $31 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை இந்த துறை இந்தியாவில் ஈர்த்தது மற்றும் ஸ்டார்ட்அப்கள் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ள ஃபின்டெக் துறையை மேம்படுத்த கொள்கை அளவில் தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
இந்தியாவில் ஃபின்டெக் துறை ஏற்படுத்திய மாற்றத்தின் சமூக தாக்கத்தை குறிப்பிட்ட பிரதமர், நிதிச் சேவைகளில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை ஃபின்டெக் குறைத்து வருகிறது என்றார்.