தடைசெய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் மூத்த நிர்வாகியும், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுபவருமான சாகிப் நாச்சன், மூளை ரத்தக்கசிவு காரணமாக டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 28) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 57.
டெல்லிக்கும் மகாராஷ்டிராவின் பட்கா பகுதிக்கும் இடையில் செயல்படும் ஒரு பெரிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத யூனிட்டில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 2023 முதல் திகார் சிறையில் நீதித்துறை காவலில் இருந்த நாச்சன், காவலில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் நான்கு நாட்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், சனிக்கிழமை மதியம் 12:10 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பதை மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு முன்னாள் தலைவர் மரணம்
