2024ஆம் ஆண்டின் டிசம்பர் 15, 16ஆம் நாட்களில் சீன-அமெரிக்க நிதிப் பணிக் குழு சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் நன்ஜிங் நகரில் 7ஆவது கூட்டத்தை நடத்தியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுக் கூட்டம் மற்றும் மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் அடுத்தாண்டின் பொருளாதார பணி பற்றிய ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் சீன தரப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் நிதி நிலைமை, நாணயக் கொள்கை, நிதி நிதானம் மற்றும் கண்காணிப்பு, சர்வதேச நிதி மேலாண்மை, பங்கு பத்திரம் மற்றும் மூலதன சந்தை, பண மோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கான நிதி திரட்டல் தடுப்பு, இரு தரப்புக்குமிடையே பொது அக்கறை கொண்ட நிதிக் கொள்கை மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் ஆகியவற்றைக் குறித்து இரு தரப்பும் மனம் திறந்து பயனுள்ள முறையில் ஆக்கப்பூர்வமான பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன. இரு நாட்டு மாநில அரசுகள், நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவிடம் சீனா கவனத்தைத் தெரிவித்துள்ளது.
நிதித் துறையிலுள்ள இரு தரப்பின் பேச்சுவார்த்தை சீன-அமெரிக்க உறவைப் பொறுப்புடன் நிர்வகிப்பதற்கு துணையாக இருக்கும். உலக நிதித் துறையின் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கும் துணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.