ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Zupee  

Estimated read time 1 min read

பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளைக் கொண்ட ஜூப்பி (Zupee) நிறுவனம், தனது 170 ஊழியர்களை, அதாவது மொத்தப் பணியாளர்களில் சுமார் 30% பேரை, பணி நீக்கம் செய்வதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையால், கேம்ஸ்24×7 (Games24x7), பாஸி கேம்ஸ் (Baazi Games) மற்றும் மொபைல் பிரீமியர் லீக் (Mobile Premier League) உள்ளிட்ட பல சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author