தமிழகத்தில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17/11/25) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் திங்கட்கிழமையன்று மிக கனமழை பெய்யலாம் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது
