மே 4ஆம் நாள் சீனாவில் 29கோடியைத் தாண்டும் பயணங்கள்

Estimated read time 1 min read

மே தினம் விடுமுறையின் 4ஆம் நாளான மே 4ஆம் நாள் சீன நாடளவில் மாநிலங்களைக் கடந்து மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 29கோடியே 37லட்சத்து 94ஆயிரத்தை எட்டி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 4.2விழுக்காடு அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில், தொடர்வண்டி மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 2கோடியே 3லட்சத்தைத் தாண்டி கடந்த ஆண்டை விட, 2.6விழுக்காடு அதிகரிக்கும். நெடுஞ்சாலை மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 26கோடியே 97லட்சத்து 10ஆயிரமாகி 4.4விழுக்காடு அதிகரிக்கும். கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 16லட்சத்து 24ஆயிரத்தை எட்டும். பயணியர் விமானங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 21லட்சத்து 60ஆயிரத்தைத் தாண்டக் கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. 

You May Also Like

More From Author