சீனத் தேசிய குடிவரவு நிர்வாகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 திங்கள் காலத்தில் சீன எல்லையைக் கடந்த மக்களின் எண்ணிக்கை 46 கோடியைத் தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.9 விழுக்காடு அதிகமாகும். இதில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 12 இலட்சத்து 68 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 27.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதில் விசா விலக்குக் கொள்கையின் மூலம் ஒரு கோடியே 58 இலட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.
சீனாவுக்கு வருகைபுரிந்த வெளிநாட்டவர்களுள் விசா விலக்குக் கொள்கையின் மூலம் வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 62.1 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 52.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.