சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சின்குவா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 102 வயதான கட்சி உறுப்பினரான ட்சாங் லியான்ஷெங்கிற்குப் பதில் கடிதம் அனுப்பி, அவருக்கும், நாடளவிலான மூத்த கட்சி உறுப்பினருக்கும் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்தார்.
இக்கடிதத்தில் ஷி ச்சின்பிங் கூறுகையில், புதிய யுகத்தில் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் தொடக்ககால குறிக்கோளை மறுக்காமல், கடமைகளை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும் என்றும், புதிய பயணத்தில் சிறந்த சாதனைகளைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
