சீன
அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 24ஆம் நாள் காலநிலை மாற்றத்துக்கான
ஐ.நாவின் உச்சிமாநாட்டில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.
தன்னுடைய
உரையில் உலகக் காலநிலை மாற்றக் கட்டுப்பாடு முக்கிய கட்டத்தில் நுழைந்துள்ளதாகக்
குறிப்பிட்ட ஷிச்சின்பிங், அதன்
நம்பிக்கையை நிலைப்படுத்த வேண்டும் என்றார். மேலும், குறைந்த
கார்பனை வெளியேற்றும் பசுமையான
வளர்ச்சி கால
ஓட்டத்தின் தேவையாகும். இதற்கு, பன்னாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்
வலியுறுத்தினார்
2035ஆம்
ஆண்டுக்குள், சீனாவின்
அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை அவற்றின்
உச்ச குறியீட்டு நிலையில் இருந்து 7 முதல் 10விழுக்காடு வரை குறைக்கப்படும் அவர்
அறிவித்தார்.