சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரானும் டிசம்பர் 4ஆம் நாள் காலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாடுகளின் அடிப்படை நலன்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நீண்டகால நலன்களின் பார்வையில், சீனா பிரான்ஸுடன் இணைந்து சமத்துவம், பேச்சுவார்த்தை, திறப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கடைபிடித்து செயல்படவும், சீனா-பிரான்ஸ் இடையேயான முழுமையான உத்திசார் கூட்டுறவின் சீரான வளர்ச்சியை நிலைநாட்டவும் விரும்புகிறது என்று தெரிவித்தார்.
ஐநாயை ஆரம்பித்த உறுப்பு நாடுகளாகவும், பாதுகாப்பு கன்வுசிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் விளங்கும் சீனா, பிரான்ஸ் இரண்டும், உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐ.நா.வை மையமாக கொண்டுள்ள சர்வதேச அமைப்புமுறையையும், சர்வதேச சட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ள சர்வதேச ஒழுங்குமுறையையும் பேணிக்காக்க வேண்டும். அரசியல் வழிமுறையில் சர்ச்சைக்கு தீர்வு கண்டு, உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவது குறித்து தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, உலக நிர்வாகத்தை மேம்படுத்தும் சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். தவிரவும், சீனாவும் ஐரோப்பாவும், கூட்டாளியுறவு என்ற இலக்குடன் செயல்பட்டு, திறந்த மனப்பான்மையுடன் ஒத்துழைப்பை முன்னெடுத்து, சீன-ஐரோப்பிய உறவு சரியான வழித்தடத்தில் முன்னுக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சீனாவுடனான உறவில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் பிரான்ஸ், ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றி வருகிறது. சீனாவுடன் விரிவான உத்திசார் கூட்டாளியுறவை தொடர்ச்சியாக ஆழமாக்க பிரான்ஸ் விரும்புகிறது. ஐரோப்பிய-சீன உறவின் சீரான, நிலையான வளர்ச்சியை முன்னேற்ற பிரான்ஸ் பாடுபடும் என்று மேக்ரான் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஷிச்சின்பிங் மற்றும் மேக்ரானின் முன்னிலையில், அணுசக்தி, வேளாண்மை மற்றும் உணவு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.
