உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

Estimated read time 1 min read

உள்நாட்டிலேயே தயாராகும் C-295 விமானங்கள், DRDO ஏவுகணை சோதனை வெற்றி மற்றும் சிறுகுறு தொழில்களுக்கும் வேலை வாய்ப்புக்கும் புதிய உத்வேகம் அளிப்பதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 135வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS தூனாகிரி, INS சன்ஷோதக் மற்றும் INS அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாராகும் C-295 விமானங்கள், DRDO ஏவுகணை சோதனை வெற்றி, சிறுகுறு தொழில்களுக்கும் வேலை வாய்ப்புக்கும் புதிய உத்வேகம் அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். நாகாலாந்தின் ‘பேபி லீக்’ கால்பந்து மற்றும் பெண்களுக்கான ‘ஃபுட்சால்’ கூட்டிணைவு ஆகிய உன்னத விளையாட்டு முயற்சிகளுக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியின் போது மண்ணாலான விநாயகர் சிலைகளை வாங்கி, பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author