மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவிட் காலக் கட்டுப்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீட்டிலிருந்தே வேலை, தேவையற்ற வெளிநாட்டுபயணங்களைத் தவிர்த்தல் மற்றும் தங்க இறக்குமதியைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை கணிசமாகப் பாதுகாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2020-ல் நிலவிய கோவிட் சூழலில், எரிபொருள் பயன்பாடு குறைந்ததால் இந்தியா சுமார் $23.8 பில்லியன் வரை சேமித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 90% கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதியையே நம்பியிருக்கும் இந்தியா, இத்தகைய சுயக்கட்டுப்பாடுகள் மூலம் பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த முடியும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் ஆலோசனை: கோவிட் கால பழக்கங்களால் இந்தியா எவ்வளவு சேமிக்க முடியும்? ஒரு முழுமையான அறிக்கை!
