கேரளத்தில் எலிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி; 9 பேருக்கு பாதிப்பு உறுதி..!

Estimated read time 1 min read

கேரளாவில் டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவைத் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது லெப்டோஸ் பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல்
காய்ச்சல் காரணமாக ஒரேநாளில் 11,776 பேர் மருத்துவமனைகளில் அனுமதி; இதுவரை 2 பேர் பலி நிலையில், 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தகவல் வெளியாகியுள்ளது 

கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

  • மருத்துவமனை அனுமதி: காய்ச்சல் அறிகுறி காரணமாக கேரளா முழுவதும் ஒரே நாளில் மட்டும் 11,776 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • எலிக் காய்ச்சல் மரணங்கள்: கண்ணூர் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து, இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர்.

  • தீவிர சிகிச்சை: எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 9 பேருக்கு தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லெப்டோஸ்பைரோசிஸ் என்பது பாக்டீரியாவால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை தொற்று நோயாகும். நோய் தொற்று பாதித்த எலி, நாய் போன்ற விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள் அல்லது தேங்கியுள்ள மழைநீரை நேரடியாகத் தொடுவதன் மூலமே மனிதர்களுக்குப் பரவுகிறது. தோலில் உள்ள வெட்டுக்கள், காயங்கள் அல்லது கண், மூக்கு வழியாக இந்த பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன.

பருவமழைக் காலம் என்பதால் தேங்கியுள்ள தண்ணீரில் பொதுமக்கள் இறங்குவதைத் தவிர்க்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறும் கேரள சுகாதாரத் துறை தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

 

You May Also Like

More From Author