அமெரிக்க மஸ்கடைன் மேனிலை பள்ளி மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் பதில் வாழ்த்து அட்டை
சீனப் பாரம்பரிய விளக்கு விழாவை முன்னிட்டு, சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க மஸ்கடைன் மேனிலை பள்ளியின் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பதில் வாழ்த்து அட்டையை அனுப்பினார்.
விளக்கு விழா வாழ்த்து தெரிவித்ததோடு, மேலதிக அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கு அவர் வரவேற்பைத் தெரிவித்தார்.