உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியின் வெற்றிக்கான காரணங்கள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105 ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாடு ஜூலை முதல் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், அனைத்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையை வலுப்படுத்தி, யுகமும் மக்களும் கொடுக்கும் பொறுப்புகளை செவ்வனே மேற்கொண்டு புதிய சாதனைகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் முக்கியச் செல்வாக்கு கொண்ட உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மாறாத வழிப்பாதை மற்றும் லட்சியத்துடன் சீனத்தனிச் சிறப்பியல்பு வாய்ந்த நவீனமயமாக்கல் கட்டுமானத்தை முன்னெடுத்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக நேர்மறை ஆற்றலை செலுத்தும். இது பற்றி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் அலிமோவ் கூறுகையில், சீனாவில் பணியாற்றிய பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களுக்கும் பயணம் செய்து, பல்வேறு நகரங்களையும் கிராமங்களையும் பார்வையிட்டேன் என்றார். அப்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சுற்றி மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு, பேரார்வத்துடன் நாட்டைக் கட்டியமைத்து, சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதை நான் கண்கூடாகப் பார்த்ததாகக் குறிப்பிடும் அவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே சுய முன்னேற்றத்துடன் பாடுபட்டு, நடைமுறைச் செயல்களுக்கும் நாட்டின் மறுமலர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது சீன வளர்ச்சியின் இரகசியங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல், உலக கட்டமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகப் பிரேசில் லூலா ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சில்வா தெரிவித்தார்.

You May Also Like

More From Author