விண்வெளித் துறையில் புதிய சரித்திரம்: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ ஏவப்படத் தயார்!  

Estimated read time 1 min read

இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய சரித்திரத்தை எழுப்பும் வகையில், நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ (Vikram-I) விண்ணில் ஏவப்படுவதற்கு முற்றிலும் தயாராகியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள இந்த ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திற்குக் கொண்டுவரப்பட்டு, விண்ணில் பாய்வதற்காகத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் விண்வெளிப் பயணத்திற்கு சமஸ்கிருத மொழியில் ‘வருகை’ என்று பொருள்படும் ‘ஆகமன்’ (Aagaman) என்று பெயரிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author