படைப்பெருந்தலைவருக்கான சீன மத்திய ராணுவ ஆணையத்தின் பதவி உயர்வு பாராட்டு விழா 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்துகொண்டார்.
சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சாங் சென்மின் இவ்விழாவுக்குத் தலைமை தாங்கி, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் ஷி ச்சின்பிங் கையொப்பமிட்ட கட்டளையை வாசித்தார்.
படைப்பெருந்தலைவர் என்ற பதவிக்கு முன்னேற்றமடைந்த சீன மத்திய ராணுவ ஆணையத்தின் கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டியின் செயலாளரும் கண்காணிப்புக் கமிட்டித் தலைவருமான சாங் ஷுகுவாங், வான் படை தளபதி வாங் காங்குக்கு ஷி ச்சின்பிங் கட்டளை ஆவணத்தை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
