இந்தியாவில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையிலான நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கிரிப்டோகரன்சிகள் இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதால், அவற்றின் மீதான தடை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை நீடிக்க வேண்டும்: நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
