பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்  

Estimated read time 0 min read

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.
மேலும், புதுடெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை திறக்க அனுமதிக்குமாறு இந்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் துணிச்சலான அறிவிப்பை, அவர் தொடர்ச்சியான சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வெளியிட்டுளளார்.

மேலும், பலுசிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் மற்றும் பிராந்தியத்தில் ஐநா அமைதி காக்கும் படையின் தலையீட்டிற்கும் அழைப்பு விடுத்தார்.

பலோச் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் மிர் யார் பலோச், பாகிஸ்தான் பலுசிஸ்தானை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

You May Also Like

More From Author