குவாடர் துறைமுகம் மீது BLA தற்கொலைப்படை தாக்குதல்: 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி எனத் தகவல்  

Estimated read time 1 min read

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மிக முக்கிய பகுதியான குவாடர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடலோர காவல்படை முகாம் மீது, தனிநாடு கோரி போராடி வரும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) ஒரு மிகப்பெரிய தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3)மாலை நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த உயிர்ச்சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பாகிஸ்தான் ராணுவமோ அல்லது அரசோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

You May Also Like

More From Author