சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 டாஸ்களை இழந்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது.
கடந்த ஜனவரி 31 அன்று புனேவில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியுடன் தொடங்கிய இந்த சோகம், பின்னர் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரை நீடித்து வருகிறது.
இதன் மூலம், 1999 பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக 12 டாஸ்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்தது.
சுவாரஸ்யமாக, இந்தத் தொடர் தோல்விகள் வெவ்வேறு கேப்டன்களால் நிரம்பியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட்டில் டாஸ் இழப்பில் புதிய சாதனை படைத்தது இந்திய அணி
