அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டு மழை பொழிந்து வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. பதிலுக்கு பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பேசிய டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஈரானின் பல்வேறு நகரங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. புஷேர் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இல்ஸாமிய புரட்சிகர காவல் படையின் தளம் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அணுமின் நிலையம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் ஈரானின் தெற்கு துறைமுக நகரமான சபாஹாரிலும் அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கடல்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடந்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது…
