புதிய உயர்தர உற்பத்தி திறன் புதிய புராட்சி

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் புதிய உயர் தர உற்பத்தி திறன் என்ற கருத்தை முதன்முறையாக முன்வைத்தார். இந்த கருத்து, பொருளாதார துறையிலிருந்து, தேசிய நெடுநோக்கு மையத்திற்கு வளர்ந்துள்ளது. சீன உயர் தர வளர்ச்சியை முன்னேற்றும் புதிய இயந்திரமாக இது மாறியுள்ளது. மார்க்சிஸ்ட் உற்பத்தி திறன் தத்துவத்தின் வளர்ச்சி இதுவே ஆகும்.

தொழில் முன்னேற்றம், அறிவியல் தொழில் நுட்ப புதுப்பிப்பு, பசுமையான வளர்ச்சி, பொது மக்களின் வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றிற்கு இது ஆதரவு அளித்ததோடு, சீன பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும். நவீனமயமாக்க தொழில் அமைப்பு முறையைக் கட்டுவது, பல்வேறு துறைகளின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தை நனவாக்குவது ஆகியவற்றின் வலிமை மிக்க ஆற்றலாக இது திகழ்கின்றது.

உலக பொருளாதார மீட்சியடைவது, தொடரவல்ல வளர்ச்சி, மனிதகுலத்தின் பொது சமூகத்தைக் கட்டியமைப்பது ஆகியவற்றிற்கு சீனாவின் திட்டத்தை இது வழங்கியது.

Please follow and like us:

You May Also Like

More From Author