ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 பணியிடங்கள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேலும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தொழில்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஏற்கனவே சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதன் தொடர்ச்சியாக சிகாகோ மாநிலத்திலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.