பகிரப்பட்ட வளர்சிக்கான உலகளாவிய நடவடிக்கை பற்றிய மன்றத்தின் முதலாவது உயர் நிலை கூட்டம் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. இந்த மன்றக்கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதத்தில் கூறுகையில்,
ஒத்துழைப்புக்கான ஒத்த கருத்தை உருவாக்கி, பொதுவான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவை முன்வைத்தேன். இது, ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த உதவும். பல்வேறு தரப்புகளின் கூட்டுப் பங்களிப்புடன், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவுக்கான ஒத்துழைப்பு, முக்கியமான ஆரம்பகால சாதனைகளைப் பெற்று பல வளரும் நாடுகளுக்கு நன்மை அளித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.