சீனப் படைப்பாளர் சங்கம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டு சீனாவின் இணைய இலக்கியம் பற்றிய நீல அறிக்கையின்படி, சீனாவில் இணைய இலக்கிய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 57.5 கோடியை எட்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 26 முதல் 45 வயது வரையிலான வாசகர்கள் சுமார் 50 விழுக்காட்டு வகிக்கின்றனர்.
மேலும், 2024ஆம் ஆண்டு, சீனாவின் இணைய இலக்கிய படைப்புகளின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்தைத் தாண்டி, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. தவிரவும், 2024ஆம் ஆண்டு இணைய இலக்கியத்துக்கான வருமானம் சுமார் 4400 கோடி யுவானாகும். சுமார் 40 ஆயிரம் படைப்புகள் அன்னிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்குப் பரவல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.