இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு

2026ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீனாவின் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான மொத்த தொகை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 877 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஏற்றுமதி தொகை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 140 கோடி யுவானாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.8 விழுக்காடு அதிகமாகும். இறக்குமதி தொகை 3 இலட்சத்து 49 ஆயிரத்து 737 கோடி யுவானாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சேவைகள் வர்த்தக பற்றாக்குறை தொகை ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 597 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13 ஆயிரத்து 266 கோடி யுவானைக் குறைந்துள்ளது.

மேலும், போக்குவரத்து சேவைகளின் ஏற்றுமதி இறக்குமதியின் அதிகரிப்பு விகிதம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அறிவாற்றல் செறிவான சேவை வர்த்தகத்தின் ஏற்றுமதி வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author