உலகளாவிய ஏஐ நிர்வாகத்தை வழிநடத்தும் சீனத் திட்டம்

2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலகளாவிய ஏஐ நிர்வாகம் பற்றிய உயர்நிலை கூட்டம் ஜூலை 17 முதல் 20ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரை, இதில் கலந்து கொண்ட விருந்தினர்களின் ஆக்கப்பூர்வ மறுமொழியையும் சர்வதேச சமூகத்தின் உயர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மனிதரின் நலனுக்கான ஏஐ, பொதுவான நன்மை மற்றும் உள்ளடக்கும் தன்மை, பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை ஆகியவற்றை ஆதரிக்கும் சீனா, பெரிய நாட்டின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. மேலும், இம்மாநாட்டில், உலக ஏஐ ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம், ஏஐ ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான செயல் திட்டத்தின் வெளியீடு உள்ளிட்ட சாதனைகள், உலகளவில் ஏஐ வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றிய பல்வேறு துறையினர்களின் ஒத்த கருத்தைப் பிரதிபலித்து, ஏஐ கூட்டாளிகள் எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவது என்ற இம்மாநாட்டின் கருப்பொருளையும் விளக்கிக் கூறியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ மூலம் பல்வேறு தொழில்களுக்கு ஆற்றல் வழங்குவதில் சீனா ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து பயனடைந்துள்ளது. திறந்த மூலம், ஒத்துழைப்பு மற்றும் பகிர்வைப் பின்பற்றும் சீனா, உலகளாவிய ஏஐ நிர்வாகத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் ஊக்குவித்து வருகிறது.

உலகளாவிய ஏஐ வளர்ச்சியை ஆதரிப்பதில் முன்மொழிவுகளை தவிர, நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் வளரும் நாடுகளுக்கு சீனா சிறப்பு ஏஐ பயிற்சிகளை அளிக்க உள்ளது. ஆசியான், அரபு லீக், ஆப்பிரிக்க ஒன்றியம், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூகம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் ஆகியவற்றுக்கான சர்வதேச ஏஐ பயன்பாட்டு ஒத்துழைப்பு மையங்களை சீனா அமைக்க உள்ளது.

உலகளாவிய ஏஐ வளர்ச்சியை மேம்படுத்தவும், இதனை மனித நாகரிக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வலிமையான நேர்மறை ஆற்றலாக மாற்றவும் சீனா சர்வதேச சமூகத்துடன் இணைந்து பாடுபட விரும்புகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author