நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி என்றார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உரையாற்றிய அஇஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. இந்த ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பகுதிகளில் சொத்து வரி நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. 2026 ல் ஊழல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படும். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும். திருமண உதவி தொகை திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டு சேலை வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் ராசிபுரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் வழங்க ரூ.932 கோடியில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக நிறுத்திவிட்டது. திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே கிடையாது. நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக. சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட 27 கர்பிணிகளுக்கு தவறான ஊசி செலுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாரத்தான் மந்திரி இதையெல்லாம் கவனிப்பதில்லை. கருணாநிதி மகள் கனிமொழி 2ஜி திட்டத்தில் ஊழல் செய்து, முன்பே தமிழகத்தை தேசிய அளவில் தலை குனிய வைத்துவிட்டார்.
திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே கிடையாது. நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக” என்றார்.